உலகின் மிகப்பெரிய வைரக்கல் கண்டுபிடிப்பு…! அதும் எங்க தெரியுமா??

0

ஆப்பிரிக்காவில் சமீபத்தில் தான் மிகப்பெரிய வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் போட்ஸ்வானாவில் உலகின் மிகப்பெரிய வைரக்கல் ஒன்று மீண்டும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த  வைரக்கல் 1,174 கேரட் எடை கொண்டதாக உள்ளது.

ஆப்பிரிக்காவில் போட்ஸ்வானா வைரக்கல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று ஆகும். போட்ஸ்வானாவில்  கடந்த 2016ஆம் ஆண்டு 1,109 கேரட் எடையை கொண்ட வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதத்தில் ஜ்வெனெங் சுரங்கத்தில் 1,098 கேரட் எடையை கொண்ட மற்றொரு வைரக்கல் கண்டு எடுக்கப்பட்டது. இதனிடையே கொரோனா காலம் என்பதால் இந்த வைரல்கல் ஏலம் நடத்தப்பட முடியவில்லை எனவும் கொரோனாவுக்கு பிறகு ஏலம் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு மிகப்பெரிய வைரக்கல் கபோரோன் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1,174 எடை கொண்டது. மேலும் இது மிக பெரிதாகவும், உள்ளங்கை அளவிலானதாகவும், வெள்ளை நிறத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1905 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்க 3,106 காரட் எடை கொண்ட வைரக்கல் தான்  இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைர கற்களில்  மிகப்பெரிய வைரக்கல்லாக இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here