2020 இல் உச்சத்தை தொட்ட மடிக்கணினி விற்பனை – கவுண்டர்பாய்ண்ட் ஆய்வாளர் தகவல்!!

0

இந்த ஆண்டில் மடிக்கணினியின் விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மடிக்கணினி 9 சதவீதம் அதிகமாக விற்பனை செய்துள்ளது என்று கவுண்டர்பாய்ண்ட் ஆய்வாளர் மெங்மெங் ஜாங் தகவல் அளித்துள்ளார்.

கொரோனா:

இந்த ஆண்டு கொரோனா ஆண்டாக சென்றுள்ளது. மேலும் இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் மடிக்கணினியின் விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு காரணமும் கொரோனா தான். ஏனென்றால் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதானால் அனைவரும் வீட்டில் உள்ளே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் ஒர்க் பிரம் ஹோம் செய்து வந்தனர்.

work
work

அப்படியென்றால் நிறுவனங்களுக்கு சென்று தாங்கள் செய்யும் வேலைகளை வீட்டில் இருந்த படியே தங்களது மடிக்கணினி மூலம் செய்து வந்தனர். இதனால் மடிக்கணினி விற்பனை அதிகமானது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்தனர். மடிக்கணினி விற்பனை உயர்வதற்கு இதுவும் ஓர் காரணம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மடிக்கணினி விற்பனை அதிகரிப்பு:

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 9 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியா மதிப்பில் சுமார் 9.64 லட்சம் கோடி மதிப்பிலான 17.3 கோடி மடிக்கணினி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை கவுண்டர்பாய்ண்ட் நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. மொத்த விற்பனையில் 68 சதவீதம் லெனோவா, ஹெவ்லெட் பேக்கர்ட் மற்றும் டெல் நிறுவனங்களின் மடிக்கணினி விற்பனை செய்துள்ளது.

‘இனி அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது’ – ஜியோவின் புத்தாண்டு சலுகை!!

மேலும் இது குறித்து கவுண்டர்பாய்ண்ட் ஆய்வாளர் மெங்மெங் ஜாங் கூறுகையில் சீன நிறுவனமான ஹவாய் மற்றும் சியோமி வருகையால் இரண்டாம் நிலை நிறுவனங்களான ஆப்பிள், ஆஷஸ் மற்றும் ஏசர் போன்றவை விற்பனை சில ஆண்டுகளாக சரிந்துள்ளது. மேலும் 2011ல் ஸ்மார்ட்போன் மற்றும் டேபுகளின் வருகையால் மடிக்கணினியில் சந்தை சரிந்தது. தற்போது கொரோனா காலங்களில் மடிக்கணினி அனைவர்க்கும் இன்றியமையா தேவையை பெற்றுள்ளது. எனவே 2021 ஆண்டுகளில் மற்றும் 2022 முதல் பாதி ஆண்டுகளில் மடிக்கணினி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Work from home
Work from home

மேலும் ஹவாய் மற்றும் சியோமி நிறுவனம் தங்களின் மடிக்கணினியில் சந்தையை விரிவாக்கம் செய்துள்ளது. மேலும் எதிர்காலங்களில் விளையாட்டுகள் மற்றும் கிராபிஸ் போன்ற கடுமையான பயன்பாடுகளுக்காக மடிக்கணினி தேவைப்படுவதால் புதுவிதமான மடிக்கணினிகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here