ஆரவாரத்துடன் வெளியான லால் ஸலாம் படம்.,  சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? முழு விமர்சனம் இதோ!!

0
ஆரவாரத்துடன் வெளியான லால் ஸலாம் படம்.,  சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? முழு விமர்சனம் இதோ!!
ஒட்டுமொத்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லால் சலாம் திரைப்படம் இன்று ரிலீஸாகி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் உள்ளிட்ட பிரபலங்களுடன் ரஜினிகாந்த் இணைந்துள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ரெட் ஜெயண்ட்  மூவிஸ் திரை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. மேலும் இப்படம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரிலீசாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான விமர்சனங்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அப்லோட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
அதாவது கிரிக்கெட்டை மையமாக வைத்திருப்பேன் படத்தில் சூப்பர் ஸ்டாரின் என்ட்ரி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதாம். மேலும் லால் சலாம் திரைப்படம் இன்றைய சமூகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனையை அழகாக விவரித்துள்ளதாம். அதன்படி லால் சலாம் திரைப்படம் முஸ்லிம் நண்பர்களுக்கு ட்ரிபியூட்டாக அமைந்துள்ளதாம்.  மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் தரமான சம்பவமாக அமைந்துள்ளதாம். அதன்படி இந்து முஸ்லீம் மதங்களுக்கு இடையே அழகான ஒரு பந்தத்தை ஏற்படுத்தும் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைய வாய்ப்புள்ளது எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here