விஷ்ணு விஷாலை டம்மியாக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – லால் சலாம் பட வியாபாரத்திற்கு போட்ட மாஸ்டர் பிளான்!!

0
விஷ்ணு விஷாலை டம்மியாக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - லால் சலாம் பட வியாபாரத்திற்கு போட்ட மாஸ்டர் பிளான்!!
விஷ்ணு விஷாலை டம்மியாக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - லால் சலாம் பட வியாபாரத்திற்கு போட்ட மாஸ்டர் பிளான்!!

தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் நடைபெறும் அரசியலை மையமாக வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அது போக இப்படத்தில் சூப்பர் ஸ்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவருடைய கதாபாத்திரம் குறித்து போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு 10 நாட்கள் கால்ஷீட் கொடுக்கப்பட்டது.

ஆனால் வெறும் மூன்று நாட்கள் தான் நடந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடித்த கோ ஆர்ட்டிஸ்ட்கள் வராததால் ரஜினி சென்னை திரும்பி விட்டார். இதையடுத்து, சென்னையில் செட் போட்டு மீதமுள்ள காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி வெறும் 10 நிமிட காட்சிகள் தான் படத்தில் வருவார் என்று முன்னரே படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

ஐயயோ.., மொட்டை அடித்த சம்யுக்தா.., துரத்தி துரத்தி வம்பு செய்த விஷ்ணு காந்த்.., ஷாக் வீடியோ உள்ளே!!

ஆனால் மொய்தீன் பாய் கதாபாத்திரம் நல்ல மாஸாக இருப்பதால் அவர் 40 நிமிடத்திற்கு இருப்பது போன்று கதையை ஐஸ்வர்யா மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்ப இந்த படம் முழுக்க முழுக்க ரஜினிகாந்த் படமாக தான் இருக்கும். மேலும் நடிகர் விஷ்ணு விஷால் படமாக இருந்தால் படம் நிச்சயமாக வியாபாரம் ஆகாது என்று ஐஸ்வர்யா இப்படி அவரை டம்மியாக்கி ரஜினியை கெத்தாக காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here