ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன லட்சுமி மேனன் – வைரலாகும் புகைப்படம்!!

0
lakshmi menon
lakshmi menon

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான லட்சுமி மேனன் நீண்ட பிரேக் எடுத்து விட்டு மீண்டும் சினிமாவில் தலையை காட்ட ஆரம்பித்துள்ளார். தற்போது உடல் உடல் எடையை குறைந்து புகைப்படத்தை வெளியிட்டு வரும் லட்சுமி மேனன் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

லட்சுமி மேனன்:

கேரள பெண்ணான லட்சுமி மேனன் கும்கி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். முதலில் நடித்தது என்னவோ சுந்தர பாண்டியன் படத்தில் தான். ஆனால் முதலில் வெளியானது கும்கி திரைப்படம் தான். அப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு 16 வயது தானாம்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

lakshmi menon
lakshmi menon

சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவரது இயல்பான நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். குடும்ப பாங்கான பெண்ணாக நடித்த லட்சுமி மேனன் கிளாமருக்கு நோ சொன்னதால் உடல் எடை காரணமாகவும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. மேலும் அவர் முன்னணி நடிகரான விஷால் உடன் கிசுகிசுக்கபட்டார்.

vishal and lakshmi menon
vishal and lakshmi menon

தொடர்ந்து அவர்கள் இரண்டு படங்கள் நடித்திருந்தனர். மேலும் லட்சுமி மேனன் தான் தனக்கு ராசியான நடிகை என்றும் விஷால் கூறியிருந்தார். படிப்பில் கவனத்தை செலுத்திய லட்சுமி மேனன் சில காலமாக சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்தார். இதற்கு விஷால் தான் காரணம் என்றும் வதந்திகள் வெளியானது.

lakshmi-menon
lakshmi-menon

மேலும் விஷாலின் திருமணத்தை பற்றி லட்சுமி மேனனிடம் கேட்ட போது நான் இல்லாமல் விஷாலுக்கு கல்யாணமா?? என்று கேட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தற்போது உடல் எடையை குறைத்துள்ள லட்சுமி மேனன் பள்ளி மாணவி போல காட்சியளிக்கிறார்.

laxmi-menon
laxmi-menon

ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் லட்சுமி மேனன். சில நாட்களாக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here