Wednesday, March 27, 2024

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி, இரு மகள்களுடன் தற்கொலை – மதுரையில் சோகம்!!

Must Read

மதுரை அருகே ஒத்தக்கடையில் கணவர் மரணம் அடைந்த சோகம் தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி மற்றும் மகள்கள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட மூவரும் உருக்கமான ஒரு கடிதத்தினையும் எழுதி வைத்துள்ளனர்.

மூளை காய்ச்சல்:

மதுரை ஒத்தக்கடை மலைசாமிபுரத்தை சேர்ந்தவர், அருண் (42). அவர் கடந்த பல  வருடங்களுக்கு முன்னால் வளர்மதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ப்ரீத்தி மற்றும் அகிலா என்று இரு மகள்கள் உள்ளனர். இருவரும் முறையே கல்லூரி மற்றும் பள்ளியில் படித்து வந்துள்ளனர். அருணின் பணி காரணமாக அவர்கள் திருச்சியில் வசித்து வந்துள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணிற்கு மூளை காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஒட்டமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு சிகிச்சையும் எடுத்து வந்துள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அவர் சில காலம் மட்டுமே இருப்பார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக அருணை தவிர்த்து அனைவரும் தூக்க மாத்திரை உட்கொண்டு வந்ததால் அவர்களது உறவினரான சரஸ்வதி மனநிலையினை மாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் முன்னால் வசித்த வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

கடிதத்தில் உருக்கம்:

அவர்கள் நால்வரும் குடும்பத்துடன் மீண்டும் மதுரையில் குடிபெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அருண் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். இந்த வேதனையினை தாங்க முடியாத வளர்மதி மற்றும் அவரது மகள்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சரஸ்வதி அவர்கள் மூவரையும் தனது வீட்டின் ஒரு பகுதியினை ஒதுக்கி அதில் தங்க வைத்துள்ளார். இப்படியாக இருக்க நேற்று சரஸ்வதி காலை 7 மணி ஆகியும் யாரும் எந்திரிக்காமல் இருந்ததால் எழுப்ப வந்துள்ளார். அப்போது மூவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

வங்கக்கடலில் இன்று மாலை உருவாகும் ‘புரெவி புயல்’ – அதீத கனமழை வெளுத்து வாங்கும்!!

அவர்கள் மூவரும் உருக்கமான ஒரு கடிதத்தினையும் எழுதியுள்ளனர். அதில், மகள்கள் எழுதியதில் “அப்பாவை விட்டு எங்களால் இருக்க முடியவில்லை…அதனால் அவரிடமே போறோம்..” என்று எழுதியுள்ளனர். அவரது மனைவி எழுதிய கடிதத்தில் “என் கணவர் அருண் சம்பாதித்த சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த ஒரு பங்கும் இல்லை. அவரகள் யாரும் எங்களுக்கு இறுதி சடங்கு செய்ய கூடாது. நகை மற்றும் பணத்தை என் அப்பாவிடம் ஒப்படைக்கவும். என் பெயரில் உள்ள சொத்துக்களை என் அம்மாவின் பெயருக்கு எழுதி தரவும்” இவ்வாறாக எழுதியுள்ளார். இந்த சம்பவம் தற்போது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -