பெண்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள் நடக்கும் நகரங்கள் – தமிழகத்தின் இந்த மாவட்டம் தான் முதலிடம்!!

0

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறைந்தபட்ச வழக்குகள் பதிவாகும் இடங்களில் கோவை மாவட்டம் முதலிடம் பெறுவதாக தேசிய குற்ற ஆவணம் தெரிவித்துள்ளது.

பட்டியல் வெளியீடு:

நாட்டில் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், கொலை மற்றும் கொள்ளை குற்றங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.  அதுவும் குறிப்பாக, இது சார்ந்த சம்பவங்கள் வட மாநிலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளன.  இது குறித்த ஆய்வை மேற்கொண்ட சுகாதார அமைச்சகத்தின் தேசிய குற்ற ஆவண காப்பகம் இதன் ஆய்வு முடிவை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், குறைந்தபட்ச வழக்குகள் தொடங்கி அதிகபட்ச வழக்குகள் வரை பதிவாகும் பெரிய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில், ஒரு லட்சம் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 9 பேர் மட்டுமே பாதிக்கபட்டுள்ளதாக பதிவாகி தமிழகத்தின் கோவை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

இதனை அடுத்து, 1 லட்சம் பெண்களில் 13.4 பேர் பாதிக்கப்படுவதாக தலைநகர் சென்னை இரண்டாம் இடத்தையும், இதே போல், 1 லட்சம் பெண்களில் 37.5 என்ற பாதிப்புடன் கேரளாவில் கொச்சின் நகரம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் மும்பையில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 53.8 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், கர்நாடகாவில்  பெங்களூரில் 1 லட்சம் பெண்களில் 67.3 பேர் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே, பெண்களுக்கு எதிராக அதிக குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ,  ஒரு லட்சம் பெண்களில் 190.7 பேர் என்ற பாதிப்புடன் முதல் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here