Friday, March 29, 2024

‘நாக்கில் எச்சில் ஊர வைக்கும் இனிப்பு’

Must Read

ஹாய் நண்பர்களே,

தினம் தினம் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸ் அதே முறுக்கு, வடைன்னு சாப்பிட போர் அடிக்குதா சரி அப்போ இன்னைக்கு நாம அத மாத்தி எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க .

ஸ்வீட் எல்லாரும்தான் செய்வாங்க ஆனா நாம அடிக்கடி செய்யாத, இதுக்காக செய்யலைன்னா என்னனு கடையில வாங்கி சாப்பிடற ஒரு இனிப்பு பண்டம் ‘மோதிச்சூர் லட்டு’  அததாங்க நாம இன்னைக்கு செய்யப்போறோம்.

சரி எப்பவும் போல எல்லாரும் அடுப்பட்டில ரெடியா இருங்கீங்களா!! வாங்க ரெசிபிக்குள போகலாம்

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 100 கிராம்
சீனி – 200 கிராம்
முந்திரி, திராட்சைப்பழம் – 2 ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
கேசரி பவுடர் – தேவையான அளவு

செய்முறை

கடலைமாவை ஒரு பத்திரத்தில போட்டுக்கோங்க, அதுகூட 1 கப் அளவு தண்ணி சேர்த்து கொஞ்சம் தண்ணியா பிசஞ்சுக்கோங்க. இப்போ ஒரு வடசட்டில ஆயில் ஊத்தி கடலமாவ ஓட்ட கரண்டில போட்டு பூந்தி ரெடி பண்ணிக்கோங்க.

பூந்தி சீக்கிரமா வெந்துறும் அதனால அடுப்ப மீடியம விட கொஞ்சம் கூட வச்சா போதும். முடுஞ்ச வர சின்ன சின்ன உருண்டையா போடணும் சின்னதா இல்லான மிக்ஸில லைட்டா அரைச்சுக்கோங்க.

தெரிஞ்சுக்கோங்க⇛⇛⇛ உர உற்பத்திப் பிரிவு வர்த்தகத்தை எளிதாக்க அரசு முயற்சி!!

இப்போ இன்னொரு சைடு சீனில 1கப் தண்ணி ஊத்தி கொதிக்கவிடுங்க கம்பி பதம் தேவையில்ல சீனி கரைஞ்சு கொதிக்கட்டும் அதுக்கப்பறமா அதுல கொஞ்சமா ஏலக்காய் பொடி போட்டுக்கோங்க அதுகூட கேசரி பவுடர் கலர் போட்டுக்கோங்க.

இப்போ அடுப்ப அணைச்சுட்டு நமா ரெடி பண்ண பூந்தியை கொஞ்சம் கொஞ்சமா சீனிகூட சேத்து கிளறிக்கலாம்.  நல்லா கலந்துட்டு அடுப்ப சிம்ல வச்சு 7 ல இருந்து 8 நிமிஷம் லேசா கிளறிவிடுங்க.

அதுக்கப்பறம் ஒரு ஸ்பூன் நெய் சேத்துக்கோங்க கூடவே நெய்ல கொஞ்சம் திராட்சைப்பழம், முந்திரிய வறுத்து சேத்து கிளறுங்க . அடுப்ப அணைச்சுட்டு வேற ஒரு பாத்திரத்துல மாத்தி வச்சுக்கோங்க.

கொஞ்ச நேரதுக்கு அப்பறமா கை பொறுக்கற சூட்டுல நல்ல மீடியம் சைஸ் உருண்டையா லட்டு பிடிச்சு வைங்க. இந்த அளவுல 12 வர லட்டு கிடைக்கும்

அவ்ளோதாங்க நாக்குல எச்சில் ஊரூம் மாதிரியான மோதிச்சூர் லட்டு ரெடி

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -