Friday, April 19, 2024

தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட உள்ள இந்திய வீரர்களின் பெயர்கள்!!

Must Read

லடாக் மோதலால் உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயர்களை தேசிய நினைவிடத்தில் பதித்து மரியாதை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

கைகலப்பு:

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் 4 முனைகளில் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் கடந்த மே 5, 6-ம் தேதிகளில் லேசான கைகலப்பு ஏற்பட்டது.

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் & வரலாறு!!

national war memoriun
national war memoriun

இதன்பின் கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.

வீரர்கள் வீரமரணம்:

சீன தரப்பில் 350 வீரர்களும் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு தலைமையில் 50 வீரர்களும் இருந்தனர். எனினும் இந்திய வீரர்கள் தீரமுடன் போரிட்டனர். இதில் சீன தரப்பில் 40 வீரர்கள் வரை உயிரிழந்தனர்.

வீரர்களுக்கு மரியாதை:

இந்த 20 வீரர்களையும் கவுரப்படுத்தும் வகையில் டெல்லியில் அமைந்துள்ள தேசிய நினைவிடத்தில் அவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட உள்ளன. பெயர் பொறிக்கும் பணிக்கு சில மாதங்கள் ஆகும் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய போர் நினைவகம்:

தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் தேசிய போர் நினைவகம் அமைந்துள்ளது. 1947 இந்தியா-பாகிஸ்தான் போர், 1962 இந்தியா-சீனா போர், 1961 கோவா போர், 1971 இந்தியா- பாகிஸ்தான் போர், சியாச்சின் போர் மற்றும் கார்கில் போரில் வீர மரணமடைந்தவர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அவர்களோடு கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களின் பெயர்களும் இணைய உள்ளன. குறிப்பாக தெலங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் இதில் வீரமரணமடைந்தனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -