ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ…,கடினமாகும் பிளேஆப் வாய்ப்பு…,

0
ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ...,கடினமாகும் பிளேஆப் வாய்ப்பு...,
ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ...,கடினமாகும் பிளேஆப் வாய்ப்பு...,

இன்று நடைபெற்று முடிந்த IPL போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் இறுதி வரை போராடி தோல்வி கண்டுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் IPL தொடரில் இருந்து KKR வெளியேறியுள்ளது.

முதலாவதாக, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இந்த அணி சார்பில், நிகோலஸ் பூரன், டி காக், மன்கட், ஷர்துல் தாகூர், சுனில் நரேன், வைபவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

செப்டம்பரில் திரைக்கு வரும் ‘ஜப்பான்’…..,அடுத்த த்ரில்லர் ட்ரீட் ரெடி….,

இப்போது, 179 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த அணி சார்பில், ரிங்கு சிங் (67), ஜேசன் ராய் (45), வெங்கடேஷ் ஐயர் (24) ஆகியோர் சிறப்பாக விளையாடி இருந்தனர். இந்த போட்டியின் முடிவில், ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி தனது பிளேஆப் வாய்ப்பை உறுதிபடுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here