தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக மலர்ந்துள்ளது – எல்.முருகன் பெருமிதம்!!

0

தமிழகத்தில் நேற்று(மே 2)சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் அதிமுக கூட்டணியில் தமிழகத்தில் களமிறங்கிய பாஜக கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கவுள்ளது திமுக கூட்டணி. 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது அதிமுக கூட்டணி. அதிமுக கட்சி இந்த தேர்தலில் 65 தொகுதியிலும் கூட்டணி கட்சிகளில் 10 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் 4 தொகுதியில் பாஜக கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுள்ளோம். வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வருவோம். தமிழகத்தில் தாமரை மலராது என்று கூறி கொண்டிருந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்பு மலர்ந்துள்ளது.

கொரோனா நோய்பரவல் எதிரொலி – நீட் தேர்வு அதிரடி ஒத்திவைப்பு!!

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையை அலங்கரிப்பர் என்று சபதம் எடுத்திருந்தோம். தற்போது அது நிறைவேறியுள்ளது. கடைசியாக கடந்த 2001ம் ஆண்டில் திமுக கூட்டணியில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது அதற்கு பின்பு 2021ம் ஆண்டில் திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி மற்றும் நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்று பெருமிதம் கொண்டார் எல்.முருகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here