கலாய்த்தவர்களின் வாயை அடைத்த ராகுல் டேவாட்டியா – ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!!

0
rahul tewatia
rahul tewatia

நம்மை அவமானப்படுத்தியவர்கள் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவதே ஒருவரின் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் நடைபெற்றது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சாதனையும் நேற்று முறியடிக்கப்பட்டு உள்ளது.

பஞ்சாப் vs ராஜஸ்தான்:

நேற்றைய ஐபிஎல் போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இது சிறிய மைதானம் என்பதால் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்தனர். அதன்படியே இரு அணி வீரர்களும் சிக்சர்களை பறக்க விட்டனர். முதலில் ஆடிய பஞ்சாப் அணி அகர்வால் மற்றும் கேப்டன் ராகுலின் அதிரடியால் 20 ஓவர்களில் 232 ரன்கள் குவித்தது. அடுத்து இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியாக இருந்தது.

KL Rahul
KL Rahul

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் – சாம்சன் ஜோடி பொறுப்பாக ஆடினர். அரைசதம் கடந்த ஸ்மித் 9வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அடுத்ததாக ராபின் உத்தப்பாவிற்கு பதில் ராகுல் டேவாட்டியா களமிறங்கினார். சுழற்பந்து வீச்சாளர்களை காலி செய்யும் திட்டத்தில் அவர் களமிறக்கப்பட்டார்.

Steve Smith
Steve Smith

ஆனால் ராகுல் பந்துகளை எதிர்கொள்ள திணறினார். இக்கட்டான சூழ்நிலையில் 19 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதனால் ரன்ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. போட்டி கையை விட்டு சென்று விட்டதாக நினைத்த நேரத்தில் சஞ்சு சாம்சன் தனது வான வேடிக்கையை தொடங்கினார். ராகுல் அடிக்க சிரமப்பட்டதை புரிந்து கொண்ட சாம்சன் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆடினார்.

ஏற்கனவே பந்துவீச்சில் சொதப்பிய ராகுல் ஆமை வேகத்தில் பேட்டிங் செய்ததால் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர். மேலும் அவரை ரிடைர் ஆக வைத்து உத்தப்பாவை களமிறக்கலாம் என்று யோசிக்க தொடங்கினர். ஆனால் அப்போதுதான் அவருக்குள் உறங்கி கொண்டிருந்த அசுரன் வெளியே வந்தார். கடைசி 3 ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்ட போது, 18வது ஓவரில் யாரும் எதிர்பாராத வகையில் ராகுல் 5 சிக்ஸர்களை பறக்க விட்டார்.

Rahul Tewtia
Rahul Tewatia

இதனால் அவரை ட்ரோல் செய்தவர்கள் வாயை மூடிக் கொண்டனர். இளம் கன்று பயமறியாது என்பது 30 பந்துகளில் அரைசதம் கடந்த ராகுல் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியில் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி இமாலய வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ரன் சேஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பூரான் பீல்டிங்:

இப்போட்டியில் பஞ்சாப் வீரர் நிக்கோலஸ் பூரான் பீல்டிங் அனைவரையும் பிரமிக்க வைத்தது. பவுண்டரி லைனில் அவர் சிக்ஸர் சென்ற பந்தை பறந்து சென்று பிடித்ததை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப்படி ஒரு பீல்டிங்கை தான் பார்த்ததே இல்லை என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here