KXIP vs RCB: மெதுவாக பந்துவீசிய பெங்களூரு அணி – கேப்டன் விராட் கோஹ்லிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!!

0

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக (அதிக நேரத்தை செலவழித்து) 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் 2 முக்கிய கேட்ச்களை தவறவிட்டு விமர்சனங்களை வாங்கிக் குவித்த விராட் கோஹ்லிக்கு இது பெரும் சோதனை காலமாக உள்ளது என்றே கூறலாம்.

பெங்களூரு vs பஞ்சாப்:

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இறங்கிய பெங்களூரு அணி நேற்று பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து பிரிவுகளிலும் சொதப்பியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பஞ்சாப் கேப்டன் ராகுல் 69 பந்துகள் 132 ரன்களை குவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெய்ன் ஓவரையும் ராகுல் விளாசினார். ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

17 வது ஓவரில் 83 ரன்களில், 18 வது ஓவரில் 89 ரன்களில் பேட்டிங் செய்தபோது என இருமுறையும் ராகுலின் எளிமையான கேட்சை கேப்டன் விராட் கோஹ்லி தவறவிட்டது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிமுறைகளின் கீழ் பெங்களூரு அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட குற்றத்திற்காக 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here