வடிவேல் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் செய்து மீண்டும் விமர்சனத்திற்கு ஆளான குஷ்பூ… மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டீங்களே!!!

0

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் மெலிந்த உடலுடன் இருக்கும்  ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வடிவேலு பாணியில் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

80s காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 90s காலகட்டத்தில் ஒரு கதா நாயகியாக மாறினார். அந்த வகையில் அவருக்கு கதநாயகியாக  முதல் படம், வருஷம் 16 என்ற தமிழ் படம் தான். அதன் பின்னர் ரஜினி, கமல் உள்ளிட்ட மாபெரும் நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின்  சின்ன தம்பி, பாண்டியன், அண்ணாமலை, சிங்காரவேலன் உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை மட்டுமல்லாமல் பல நாட்கள் திரையில் ஓடிய சாதனையையும் படைத்தது.

மேலும் இவர் அந்த காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். இந்நிலையில் இவர் 2000 ஆம் ஆண்டு  இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் குணச்சித்திர வேடங்கள் மூலம் திரையில் தோன்றினார்.

இந்நிலையில் இவர் தற்போது தனது உடல் எடையை கணிசமாக குறைத்து மெலிந்த உடல் தோற்றத்துடன் உள்ளார். அந்த உடல் அமைப்புடன் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வடிவேலு பாடி சோடா கதாபாத்திர தோற்றத்தில் மண்டை மேல் ஒரு கொண்டை வைத்து கொண்டு பல புகைப்படங்களை எடுத்து கொண்டு உள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here