உலகில் பெரும்பாலான மக்கள் வித்தியாச வித்தியாசமாக சாதனை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஒரு வயது முதிர்ந்த பாட்டி கின்னஸ் சாதனை செய்துள்ளார். அதாவது கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த குஞ்சீரும்மா என்ற மூதாட்டி( வயது 120) உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கு முன்னர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மரியா பிரன்யாஸ்(வயது 116) என்ற மூதாட்டி இடம் பிடித்திருந்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளி குஞ்சீரும்மா கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 17 வயதிலே திருமணம் முடிந்த அவருக்கு 13 குழந்தைகளாம். ஐந்து தலைமுறையை பார்த்த இவருக்கு தற்போது வரை கண் பார்வை திறன்,கேட்கும் திறன் குறையாமல் healthy ஆக இருந்து வருகிறாராம். இப்பொழுது சோசியல் மீடியாவில் இந்த பாட்டி தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
மகளிர் உரிமைத் தொகை.., செலக்ட் ஆனால் இப்படி தான் குறுஞ்செய்தி வரும்.., வெளியான அறிவிப்பு!!!