கும்பமேளாவில் பக்தர்களுக்கு தடை?? பிரதமர் கோரிக்கை எதிரொலி!!

0

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் கும்பமேளா திருவிழாவை கொரோனா நோய்த்தொற்று காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களை கொண்டு நடத்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

கும்பமேளா:

இந்து சமூகத்தினரால் ஆறு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் நிகழ்ச்சி தான் கும்பமேளா. இது நான்கு இடங்களில் மிக சிறப்பாக நடைபெற்று வரும். அந்த வகையில் இந்த கும்பமேளா அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் கோலாகலமாக நடைபெற்று வரும். தற்போது அந்த வகையில் கடைசியாக 2013ம் ஆண்டு கும்பமேளா நடைபெற்றது. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது இந்த ஆண்டு கும்பமேளா ஹரித்துவாரில் நடந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் நாட்டில் தற்போது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர். ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள், சாதுக்கள் முதலியவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கண்ணம்மாவால் சண்டை போட்டு கொள்ளும் பாரதி மற்றும் சௌந்தர்யா – பலவித பாச போராட்டங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

இந்நிலையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஜூரா அகராவின் சுவாமி அவ்தேசானந்த் கிரியுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது கூறிய மோடி, நாட்டில் அதிகளவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால் அதிகளவிலான பக்தர்களை கொண்டு கும்பமேளாவை நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது அவரது கோரிக்கைக்கு பதிலளித்த சுவாமி, பிரதமரின் கோரிக்கையை நாங்கள் மதிக்கிறோம். உயிர்களை கைப்பற்றுவது புனிதமான ஒன்று எனவே புனித நீராடுவதற்கு மக்கள் கூட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here