KPY தீனாவுக்கு நடந்த கோலாகல திருமணம்….,வைரலாகும் புகைப்படங்கள்…..,

0
KPY தீனாவுக்கு நடந்த கோலாகல திருமணம்....,வைரலாகும் புகைப்படங்கள்.....,
KPY தீனாவுக்கு நடந்த கோலாகல திருமணம்....,வைரலாகும் புகைப்படங்கள்.....,

விஜய் டிவியில் வெளியான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் தீனா. தனது நகைச்சுவை பேச்சு மற்றும் பிரபலங்களுக்கு போன் செய்து கலாய்க்கும் திறன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இவர். இப்படி சின்னத்திரையில் கிடைத்த எக்கச்சக்க வரவேற்புகளை அடுத்து தீனாவுக்கு நடிகர் தனுஷின் ‘பவர் பாண்டி’ திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது. இப்படி, ஒரு பக்கம் ரியாலிட்டி ஷோ, மறுபக்கம் சினிமா என்று பிசியாக சுற்றித் திரிந்த நடிகர் தீனாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்…, பேட்மிண்டனில் வெற்றி வேட்டை தொடங்கி அபாரம்!!

அந்த வகையில், தீனா திருமணம் செய்துள்ள பிரகதி ஒரு கிராபிக் டிசைனராம். இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும். இப்போது, தீனாவின் சொந்த ஊரான திருவாரூரில் நடைபெற்ற திருமணத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் புதுமணத் தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here