‘படத்துக்கு வாய்ப்பு கொடுத்த தனுசுக்கு நன்றி’ – கண் கலங்கிய அறந்தாங்கி நிஷா!!

0

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்துக்கு வாய்ப்பு தந்ததுக்கு அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி நிஷா:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். அதன் வரிசையில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் அசுரன் போன்ற பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் கடைசியாக வெளிவந்த சில படங்கள் தற்போது நடிகர் தனுஷ்-க்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் ஒருபோதும் குறைந்தது இல்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கலக்கப்போவது யாரு அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதாவது கலக்கப்போவது யாரு சீசன் 5 வில் கலந்து ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து கொண்டவர் அறந்தாங்கி நிஷா. அதில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முதல் படமான மாரி 2 படத்தில் நடித்து கலக்கினார்.

அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஓடிடியில் வெளி வந்த ஹாஸ்டெல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்தார். இந்நிலையில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுடன் சேர்ந்து மீண்டும் நடித்துள்ளார் அறந்தாங்கி நிஷா. இந்த வாய்ப்பு கொடுத்ததற்காக தனுசுக்கு நன்றிகளை தனது இன்ஸ்டா பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here