தமிழகத்தின் இந்த மாவட்டத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

0

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்று, மிக வேகமாக காட்டுத்தீயை போல் பரவி வருவதாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் வேதனை:

தமிழகத்தில் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டது. அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக மாவட்ட ஆட்சியர் வேதனை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 3,786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை,  24,792 நபர்கள் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் நிலையில்,  2,142 நபர்கள் ஒரே நாளில் சிகிச்சையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், தடுப்பூசி போடாதோர் விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் கோவை மாவட்ட மக்களுக்கு அம்மாவட்டத்தின் ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here