இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று கோடக் மஹிந்திரா. மும்பையை மைமயாகக் கொண்டு செயல்படும் கோடக் மஹிந்திரா கடந்த 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த வங்கி நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வந்த உதய் கோடக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்போது, உதய் கோடக் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து வங்கியின் இடைக்கால தலைவராக தீபக் குப்தா என்பவர் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகிய உதய் கோடக் நிர்வாகத்தில் தலையிடாத இயக்குனராக தொடர்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.