கைகோர்க்கும் பிரபல மற்றும் இளம் இயக்குனர்கள் – மணி ரத்தினம், சங்கர் கூட்டணி!!!

0

புகழ்பெற்ற இயக்குனராக மணி ரத்னம் சமீபத்தில் “நவரசா” என்ற வெப் சீரிஸை தயாரித்து இருந்தார். தற்போது பஞ்சாபகேசன் என்பவருடன் இணைந்து சரித்திர கதையான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தினை இயக்கி வருகிறார். ஆகஸ்ட் 25 ஆம் தேதியான இன்று ஒரு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால் இயக்குனர் ஷங்கர் மற்றும் மணி ரத்தினம் இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு “ரெயின் ஆன்” என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் இவர்களுடன் இயக்குனர்கள் மிஸ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சசி, வசந்த பாலன், லிங்குசாமி, லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல் மற்றும் ஏஆர் முருகதாஸ் அனைவரும் இணைத்து செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

தாலிபான்களிடம் இருந்து தப்பித்த ஆப்கான் பெண் ரிப்போர்ட்டர் வீடியோ!!!

இந்த தரியாரிப்பு நிறுவனம் புதிதாக வரும் இயக்குனர்கள் அனைவருக்கும் ஒரு ஊக்கமாகவும், அவர்களது திறமைகளை உலகிற்கு காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தில் திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ், குறும்படங்கள் என்று அனைத்தும் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதனை ஓடிடி தளங்களில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இயக்குனர் வெற்றிமாறனின் ஆபிஸை இந்த நிறுவனத்தின் ப்ரொடக்சன் ஆபீஸாக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று இயக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் கமல் ஹாசனை வைத்து “விக்ரம்” என்ற திரைப்படத்தினை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், பின்னர் இந்த நிறுவனத்தின் புதிய திரைப்படத்தினை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here