
“எதிர் நீச்சல்” சீரியலை இயக்கி வரும் இயக்குனர் திருமுருகன் “கோலங்கள் தொடரின் பார்ட் 2” குறித்து சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசியுள்ளார்.
கோலங்கள் சீரியல் பார்ட் 2:
மக்களை அதிகம் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பல தொலைக்காட்சிகள் போட்டிபோட்டு புதுப்புது சீரியல்களை அறிமுகபடுத்தி வருகின்றன. ஆனால் அதில் ஒரு சில தொடர்கள் மட்டுமே காலம் கடந்து பேசப்படும். அப்படிபட்ட ஒரு தொடர் தான் கோலங்கள். இந்த தொடர் 2003ல் தொடங்கி கிட்டத்தட்ட 1533 எபிசோடுகளை கடந்து 2009ல் முடிந்தது.மேலும் இந்த தொடரில் தேவயானி நடிக்கும் கேரக்டரில் முதலில் நடிகை சௌந்தர்யா நடிக்க இருந்ததாக சொல்லப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அவர் சில காரணத்தால் நடிக்க முடியாமல் போனதால் அந்த பாத்திரத்திற்கு தேவயானி செலக்ட் ஆனார். அதுமட்டுமின்றி தற்போது சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலை இயக்கி வரும் திருமுருகன் தான் கோலங்கள் தொடரையும் இயக்கி இருந்தார். இந்நிலையில் கோலங்கள் சீரியல் பார்ட் 2 குறித்து திருமுருகன் பேசியுள்ளார். அதாவது சமீபத்தில் கோலங்கள் தொடரில் நடித்த நடிகை சத்யபிரியாவின் 70 வது பிறந்தநாள் விழாவில் திருமுருகன் கலந்து கொண்ட போது, அவரிடம் கோலங்கள் பார்ட் 2 குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இத பண்ணாத மா ப்ளீஸ்., கெஞ்சி கூத்தாடிய கமல்! எடுத்தெறிந்து பேசிய மகள் ஸ்ருதிஹாசன்!!
அதற்கு அவர் கூறியதாவது, அதிக நம்பிக்கைகளுடன் உருவானது கோலங்கள் சீரியல். நிச்சயமாக அதன் பார்ட் 2 வரும். இந்த தொடரை வேறு நிறுவனம் தயாரிப்பதால் தான் இவ்வளவு தாமதம். மேலும் கோலங்கள் இரண்டாம் பாகமும் சன் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும் என்று கூறினார். தற்போது கோலங்கள் சீரியல் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.