விராட் கோலி சதத்தால் வெளியேறிய வீரர்.., அப்போ T20 உலக கோப்பையில் இடம் கிடையாதா?

0
விராட் கோலி சதத்தால் வெளியேறிய வீரர்.., அப்போ T20 உலக கோப்பையில் இடம் கிடையாதா?
விராட் கோலி சதத்தால் வெளியேறிய வீரர்.., அப்போ T20 உலக கோப்பையில் இடம் கிடையாதா?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் விளாசியதன் மூலம் தொடக்க வீரரான ராகுல் அணியில் இடம்பெறுவது கேள்விக்குறியாக உள்ளது.

அப்போ… நான் வெளிய உட்காரவா…!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி வீரர் விராட் கோலி மூன்று வருடங்களுக்குப் பிறகு தனது 71 வது சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே BCCI, ஆசிய கோப்பையில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் தான் T20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் பல வீரர்கள் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்களில் விராட் கோலியும் ஒருவர். விராட் தனது இடத்தை தக்க வைத்ததன் மூலம் அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் ராகுல் டி20 உலக கோப்பையில் களமிறங்குவது கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடினர். இதனால் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு உலக கோப்பையில் இடம்பெறும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் விராட் கோலி சிறப்பாக ஆடி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ஆனால் ராகுல் தனக்கு கிடைத்த இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீது இருந்த நம்பிக்கை BCCI க்கு போய்விட்டது. இதனால் உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வர்கள் இவரை அணியில் எடுக்க மாட்டார்கள் என்று தான் தெரிகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் T20 உலக கோப்பைக்கான இந்திய அணி வெளியாகி விடும் என்பதால் யார் இடம் பெறப் போகிறார்கள் என பொறுத்து இருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here