டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக அர்ஷ்தீப் சிங்.., புகழ்ந்து தள்ளிய கே.எல். ராகுல்.., பேட்டிங் சொதப்ப இதான் காரணம்!!

0
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக அர்ஷ்தீப் சிங்.., புகழ்ந்து தள்ளிய கே.எல். ராகுல்.., பேட்டிங் சொதப்ப இதான் காரணம்!!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 போட்டியில் தாங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை இந்திய வீரர் KL ராகுல் தெரிவித்துள்ளார்.

IND VS SA

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T20 போட்டி நேற்று திருவனந்தபுரம் மைதானத்தில் அரங்கேறியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் விராட், ரோகித் அடுத்ததடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

பின்னர் களமிறங்கிய ராகுல், சூர்யகுமார் நிதானமாக ஆடி ரன்கள் குவித்தனர். இதனால் இந்திய அணி 16.4 ஓவர் முடிவில் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த தொடக்க வீரர் ராகுல் ரன் குவிக்க மிகவும் சிரமப்பட்டார். இது பற்றி அவரிடம் கேட்டபோது மைதானம் மிகவும் மோசமாக இருந்தது.அதனால் தான் நானும் மோசமாக விளையாடினேன் என கூறினார்.

தவானை அம்போன்னு விட்ட BCCI.., இவங்களுக்கு திறமை மட்டும் போதாது போலயே.., விமர்சிக்கும் ரசிகர்கள்!!

மேலும் எங்கள் வெற்றிக்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தும் ஆட்டம் மிகவும் வியப்படைய வைக்கிறது என பாராட்டியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இந்தியாவுக்கு ஒரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக அர்ஷ்தீப் சிங் தனது சாதனைகளை படைக்க ஆரம்பித்து விட்டார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here