
சர்வதேச இந்திய அணியானது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியை 228 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று வரலாற்று படைத்தது. ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தால் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஓய்வில் இருந்த கே எல் ராகுல் மீண்டும் இந்த போட்டி மூலம் இந்திய அணியில் இணைந்து, சதம் (111*) விளாசி அசத்தினார். இவருடன் இணைந்து விராட் கோலியும் சதம் அடிக்க, இந்த பார்ட்னர்ஷிப் 233 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது. இந்த கம்பேக் பார்ட்னர்ஷிப் குறித்தும் கே எல் ராகுல் மனம் திறந்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, “நீண்ட நாளுக்கு பிறகு அணியில் இணைவதால் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது. தண்ணீர் கேன் கொடுக்கும் வேலையை தான் செய்வேன் என நினைத்தேன். இதனால், விளையாடும் உபகரணத்தை கூட எடுக்க வில்லை. ஆனால், டாஸ் போடும் 5 நிமிடத்திற்கு முன் தான் ‘நீ போட்டியில் விளையாடுகிறாய்’ என பயிற்சியாளர் டிராவிட் கூறினார்.” என்று கே எல் ராகுல் சதம் பிறகு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, “விராட் கோலி தனது ரன்களுக்கு மட்டும் ஓடவில்லை, மற்ற வீரர்களுக்காகவும் அவர் வேகமாக ஓடுகிறார். அவர் எப்போதும் தனது பேட்டிங் பார்ட்னர்களை வேகமாக ஓட தூண்டி, ஊக்கப்படுத்துகிறார்” என்று கே எல் ராகுல் குறிப்பிட்டு கூறியுள்ளார்.