பார்டர் கவாஸ்கர் டிராபி: கே எல் ராகுலின் இடம் என்ன?? அவரே வெளியிட்ட பதிவு இதோ!!

0
பார்டர் கவாஸ்கர் டிராபி: கே எல் ராகுலின் இடம் என்ன?? அவரே வெளியிட்ட பதிவு இதோ!!
பார்டர் கவாஸ்கர் டிராபி: கே எல் ராகுலின் இடம் என்ன?? அவரே வெளியிட்ட பதிவு இதோ!!

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்கான பிளேயிங் லெவனில் தனக்கான இடம் குறித்து, கே எல் ராகுல் தெரிவித்துள்ளார்.

கே எல் ராகுல்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான, பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்த எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இடையே அதிகம் எழுந்து வருகின்றது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் (9ம் தேதி) நாக்பூரில் நடைபெற இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடரின் வெற்றிக்காக இரு அணிகளும், தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில், கே எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் இருவரும் திருமணத்திற்கு பின் இந்த தொடருக்காக இந்திய அணிக்கு திரும்பி உள்ளனர். இந்திய அணியை பொறுத்த வரையில், சமீபத்திய போட்டிகளில் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை அமைத்து வருகிறார்கள். இதனால், அணிக்கு திரும்பி உள்ள கே எல் ராகுல், தொடக்க வீரராக களமிறங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?? ஆஸி,தொடரில் வாய்ப்பு கிட்டுமா!!!

இந்நிலையில், கே எல் ராகுல், பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்கான பிளேயிங் லெவன் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அணி நிர்வாகம் மிடில் ஆர்டரில் என்னை களமிறங்க கூறினால் அதை செய்ய தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here