வெற்றியுடன் தொடங்குமா கொல்கத்தா அணி – இன்று மும்பையுடன் மோதல்!!

0

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2020 முதல் போட்டியில் இன்று மும்பையை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்புடன் உள்ளது. இரு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது.

கொல்கத்தா vs மும்பை:

ஏற்கனவே இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையில் இன்று களம் காண்கிறது. ஆனால் மும்பைக்கு எதிராக 25 போட்டிகளில், மும்பை 19 முறை வெற்றி பெற்றுள்ளது. கே.கே.ஆர் ஆறு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ரோஹித் ஷர்மா போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை சமாளிக்க சுனில் நரைன் போன்ற பவுலர்கள் சிரமப்பட வேண்டி இருக்கும். கொல்கத்தா அணியின் அசுரன், கடந்த சீசனில் தொடர் நாயகன் விருது பெற்ற ரசல் இம்முறையும் பல வான வேடிக்கைகளை காட்ட காத்திருக்கிறார். முதல் போட்டியில் சென்னைக்கு எதிராக சொதப்பிய பும்ராஹ் இம்முறை பார்முக்கு வரவில்லை என்றால் மும்பைக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. டாஸில் வெற்றி பெற்று முதலில் பந்துவீசும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் அபுதாபி மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றது.

கொல்கத்தா உத்தேச 11 அணி: சுனில் நரைன், சுப்மான் கில், நிதீஷ் ராணா, ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (கேப்டன் & wk), பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மாவி, பிரசீத் கிருஷ்ணா

சிஎஸ்கே vs மும்பை மேட்ச் – இத்தன கோடி பேர் பார்த்தோமா??

மும்பை உத்தேச 11 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (wk), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குர்னால் பாண்ட்யா, நாதன் கூல்டர்-நைல் / ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here