இனிதே முடிந்த பசங்க பட கிஷோர்-ப்ரீத்தி திருமணம்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!!

0
இனிதே முடிந்த பசங்க பட கிஷோர்-ப்ரீத்தி திருமணம்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!!
இனிதே முடிந்த பசங்க பட கிஷோர்-ப்ரீத்தி திருமணம்.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!!

பசங்க படத்தில் சிறுவனாக நடித்த கிஷோர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிஷோர்-ப்ரீத்தி

பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க படத்தில் அன்புக்கரசுவாக நடித்து பிரபலமானவர் தான் கிஷோர். இந்த படத்தில் இவரது சிறந்த நடிப்புக்காக குழந்தை நட்சத்திர விருது கிடைத்தது. இதை தொடர்ந்து கோலி சோடா, வஜ்ரம், 6 அத்தியாயம், சகா, ஹவுஸ் ஓனர், உறுதிகொள் போன்ற படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் ஒரு பிஸியாக இருந்த கிஷோர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் சீரியல் நடிகை ப்ரீத்தியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, “உன்னை திருமணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டார்.

மார்ச் 30ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!!

சீரியல் நடிகை ப்ரீத்தி விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஆபீஸ்” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இப்போது ஏகப்பட்ட சீரியலில் நடித்து வருகிறார்.மேலும், கிஷோரை விட ப்ரீத்தி 4 வயது பெரியவர் என்பதால் சிலர் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

ஆனால் கிஷோர் சமீபத்தில் ப்ரீத்தி என்னை விட வயதில் மூத்தவளாக இருந்தாலும் எங்கள் வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்டார். இந்நிலையில் இவர்களுக்கு இப்போது திருமணம் முடித்துள்ள நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here