லிப்லாக் சீன்ல கூட வித்தியாசமா ஸ்கோர் பண்ணிய கிருத்திகா உதயநிதி – ரசிகர்களுக்கு தரமான சம்பவம்!!

0
லிப்லாக் சீன்ல கூட வித்தியாசமா ஸ்கோர் பண்ணிய கிருத்திகா உதயநிதி - ரசிகர்களுக்கு தரமான சம்பவம்!!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியுள்ள பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ள, லிப்லாப் பற்றிய ஒரு காட்சிக்கு  அழகான கதையை கிருத்திகா உருவாக்கியுள்ளார்.

அந்த சீனுக்கும் விளக்கம்:

நடிகர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி, பிரபல இயக்குனராக திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. தற்போது, முதல் முறையாக  பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிசை இயக்கியுள்ளார். 7 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், காளி வெங்கட், 96 நடிகை கௌரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அப்பாவை இழந்த ஒரு மகன், கடைசி காலத்தில் அவருடன் வாழவில்லையே என்ற குற்ற உணர்ச்சியை போக்க குரூப் செஷனில் கலந்து கொள்கிறார். அங்கு, வித்யாச பிரச்சனைகளை கொண்ட 5 பேரின் துன்பத்தை தீர்த்து வைக்க  ஊர் ஊராகப் போகும் ட்ரிப் சம்பந்தப்பட்ட  கதை தான் இது. இந்த வெப் சீரிஸ்க்கு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர்  பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குடும்பங்கள் கொண்டாடும் இந்த கதையில், கடைசியில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு ஒரு லிப்லாக் காட்சி வைக்கப்பட்டது. இது குறித்த, மனதை டச் பண்ணும் விளக்கமும் க்ளைமாக்ஸில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள், எந்த கவர்ச்சியும் இல்லாமல் ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்ததுக்கு நன்றி  என கிருத்திகாவை பாராட்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here