
சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்து பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட உள்ள நிலையில், இன்னும் நிறைவு பெறாத பணிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொட்டுணர்ந்து செல்லும் வகையிலான தரை முழுமையாக அமைக்கப்படவில்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
செவி மற்றும் பேசும் திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காட்சி அறிவிப்பு அனைத்து இடங்களிலும் அமைக்கப்படவில்லை உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் அமைக்க உத்தரவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக பேருந்து பயணிகளே…, பயண கட்டணத்தை அதிரடியாக குறைத்த அரசு…., வெளியான முக்கிய அப்டேட்!!