ஒரு வயதில் கடத்தப்பட்ட பெண் குழந்தை.., 57 வருடங்களுக்கு மீட்பு.., கண்கலங்க வைத்த சம்பவம்!!

0
ஒரு வயதில் கடத்தப்பட்ட பெண் குழந்தை.., 57 வருடங்களுக்கு மீட்பு.., கண்கலங்க வைத்த சம்பவம்!!
ஒரு வயதில் கடத்தப்பட்ட பெண் குழந்தை.., 57 வருடங்களுக்கு மீட்பு.., கண்கலங்க வைத்த சம்பவம்!!

குழந்தையாக இருக்கும் போது கடத்தப்பட்ட பெண் ஒருவர் பல வருடங்களுக்கு பிறகு தாய், தந்தையிடம் சேர்ந்த காட்சி அனைவரையும் ஆனந்த கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.

குழந்தை மீட்பு:

முந்தைய காலத்தில் இருந்தே சிலர் குழந்தைகளை கடத்தி, அவர்களை வைத்து பெற்றோர்களை மிரட்டி பணம் கேட்பது மற்றும் அக்குழந்தைகளை ஊனம் ஆக்கி பிச்சை எடுக்க வைப்பது போன்ற சம்பவங்கள் இன்று வரை அரங்கேறி வருகிறது. ஆனால் கடத்தப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெற்றோர்களிடம் சேருவது குறைந்தபட்சமே. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட குழந்தை தற்போது பெற்றோரிடம் சேர்ந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் பகுதியில் வாழ்ந்து வந்தவர் தான் அல்டா அபான்டென்கோ. இவருக்கு கடந்த 1971ல் மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அல்டா அபான்டென்கோக்கும் அவரது மனைவியும் தொழில் பிஸியாக இருந்ததால், குழந்தையை பார்த்துக்கொள்வதற்கு ஒருவரை நியமித்தார். அந்த நபர் ஆகஸ்ட் 23, 1971 அன்று வீட்டில் இருந்து மெலிசா ஹைஸ்மித்தை கடத்தி சென்றுவிட்டார். அல்டா குடும்பத்தினர் எல்லா இடங்களிலும் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தையை பற்றியும், கடத்தி சென்ற நபர் பற்றியும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 1971 ல் கடத்தப்பட்ட மெலிசா ஹைஸ்மித் 57 வருடங்களுக்கு பிறகு சார்லஸ்டன் அருகே இருப்பதாக, அல்டா உறவினர்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அம்மா உணவகம் பற்றி அதிரடி அறிவிப்பு! அரசின் முடிவு குறித்து சென்னை மேயர் புதிய உத்தரவு!!

அதன் பின்னர் அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தபோது மெலிசா ஹைஸ்மித் தான் என்று கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து மெலிசா சகோதரியான ஷரோன் ஹைஸ்மித் கூறியதாவது ” என் சகோதரி சிறு வயதில் கடத்தப்பட்ட போது என்னுடைய அம்மா மெலிசாவை கொலை செய்துவிட்டு, அதை மூடி மறைக்கிறார் எனப் பேசிவந்தனர். இதனால் என்னுடைய அம்மா மனஅழுத்த ஏற்பட்டு கவலையுடன் இருந்தார். இப்போது அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக என் தங்கை கிடைத்துவிட்டால் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here