Wednesday, March 27, 2024

ஆன்லைன் கேமில் ரூ.11 லட்சம் செலவிட்ட சிறுவன் – அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Must Read

ஆப்பிள் ஐபோனில் 6 வயது சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடி இந்திய மதிப்பில் ரூ.11 லட்சம் வரை செலவு செய்துள்ளான். ஆப்பிள் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு தர சொல்லி கேட்டதற்கு பெற்றோர்கள் தான் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதால் அந்த சிறுவனின் பெற்றோர்கள் கவலை அடைத்துள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டு:

தற்போது உள்ள சூழல் குழந்தைகள் அனைவரும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் நியூயார்கை சேர்ந்த ஜெசிக்கா மற்றும் ஜான் தம்பதியினருக்கு 6 வயதில் படுசுட்டியான மகன் உள்ளான். ஜெசிக்கா வேலை பார்க்கும் போது அவன் அதிகமாக தொல்லை கொடுத்து வந்ததால் தனது ஆப்பிள் ஐபோனை விளையாட கொடுத்துள்ளார். அதில் சோனிக் போர்ஸ் என்ற ஐபோனின் ஆன்லைன் விளையாட்டினை விளையாடியுள்ளான். அதில் காய்ன்களை பெற பணம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டில் கோல்ட் காய்ன்களை பெறுவதற்காக தினமும் அந்த சிறுவன் இந்திய மதிப்பில் 1,80,000 ரூபாய் வரை எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் ஜெசிக்காவின் வங்கி கணக்கில் இருந்து 25 முறை பணம் எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2500 டாலர்கள் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 16 ஆயிரம் டாலர்கள் எடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் தான் மோசடி ஏதேனும் நடந்து வருகின்றது என்று நினைத்த ஜெசிக்கா வங்கியில் புகார் அளித்துள்ளார். பின்னர், விசாரித்து பார்த்ததில் தனது மகன் தன இவ்வாறாக பணம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஜெசிக்கா ஐபோன் நிறுவனத்திடம் நடந்ததை எடுத்து சொல்லி பணத்தினை திருப்பி தர வேண்டியுள்ளார். ஆனால், ஆப்பிள் நிறுவனமோ விவகாரம் நடந்து 2 மாதங்கள் ஆகிவிட்டதால் பணத்தினை திருப்பி தர இயலாது என்று மறுத்துள்ளனர்.

6000mAh பேட்டரியுடன் ‘மோட்டோ ஜி9 பவர்’ ஸ்மார்ட்போன் – இன்று விற்பனை தொடக்கம்!!

இதனை அடுத்து ஜெஸ்ஸிகா ஆப்பிள் நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்துள்ளார். இதற்கு ஆப்பிள் நிறுவனம்,”குழந்தைகளிடம் போனை கொடுக்கும் போது பெற்றோர்கள் தான் கவனமுடன் இருக்க வேண்டும். எங்களுடைய போன்களில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதனை ஏன் நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை? குழந்தைகள் போனை பயன்படுத்தும் நிலை இருந்தால் வங்கி கணக்குகளை லாக் சித்து வைத்திருக்கலாம்” என்று பதில் அளித்துள்ளது. இந்திய மதிப்பில் 11 லட்சத்தை இழந்து ஜெசிக்கா தற்போது கவலையுடன் இருக்கிறார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -