இது என்ன யாஷ்-க்கு வந்த சோதனை.. கேஜிஎஃப் நாயகன் குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

0
இது என்ன யாஷ்-க்கு வந்த சோதனை.. கேஜிஎஃப் நாயகன் குறித்து வெளியான பரபரப்பு தகவல்!

அண்மையில் ராமர் கோயில் கட்டுவதற்கு கே ஜி எஃப் நடிகர் யாஷ் 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக செய்திகள் வெளியாகியது. தற்போது இந்த செய்தி உண்மையல்ல என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யாஷ்:

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் யாஷ். இவர் நடித்த சில படங்கள் கை கொடுக்காத நிலையில், கடந்த 2018ம் ஆண்டு வெளி வந்த கே.ஜி.எஃப் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் யாஷ் பட்டி தொட்டியெல்லாம் பரவி ரசிகர்கள் மத்தியில் தற்போது முன்னணி நடிகராக பெயர் வாங்கினார். மேலும் படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து ஏப்ரல் மாதம் இரண்டாம் பாகம் வெளியாகியது.

நடிகை ஜோதிகாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கா – இப்போ தான் முதல் தடவை பார்க்குறோம்!

இந்நிலையில் அண்மையில் ராமர் கோயில் கட்டுவதற்கு யாஷ் 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த செய்தியை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பேஸ்புக் பயனர் ஒருவர் நடிகர் யாஷ் ராமர் கோயில் கட்டுவதற்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இது ஒருபக்கம் நல்ல விமர்சனங்களையும் மறுபக்கம் எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இது குறித்து வெளியான அறிக்கையில்,” இந்த புகைப்படம் கே.ஜி.எஃப் 2 வெளியாவதற்கு முன்பு திருப்பதியில் எடுத்த புகைப்படம் என்றும்,மேலும் இந்த செய்தி போலியானது, இது போன்ற எதையும் யாஷ் அறிவிக்கவில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தன்னை பற்றி வெளியான போலி செய்திக்கு யாஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here