சாலை விபத்தில் சிக்கிய கேஜிஎப் பட நடிகர் – கார் மீது லாரி மோதிய சோகம்!!

0
KGF 2 பார்த்து செய்யக் கூடாததைச் செய்த 15 வயது சிறுவன் - உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் அனுமதி!!
சாலை விபத்தில் சிக்கிய கேஜிஎப் பட நடிகர் - கார் மீது லாரி மோதிய சோகம்!!

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் கேங்ஸ்டராக நடித்து அசத்திய கன்னட நடிகர், பி.எஸ்.அவினாஷ் பெங்களூருவில் கார் விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய நடிகர்:

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வருபவர் பி.எஸ்.அவினாஷ். இவர், பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் கேங்ஸ்டராக நடித்து  அசத்தியிருந்தார். இதுபோக, ஒரு சில கன்னட படங்களில் பிசியாக நடித்து வந்தார். பெங்களூரில் வசித்து வரும், இவர் தனது பென்ஸ் காரில், உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, சாலை விபத்தில் சிக்கி உள்ளார்.

இவரது கார் மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக இவர் உயிர் தப்பியுள்ளார். இது குறித்த, முக்கிய பதிவு ஒன்றை இவர் தனது இன்ஸ்டாகிராம்  அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இவரின் இந்த அறிக்கையை அடுத்து இவரது, ரசிகர்கள் பலரும் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இந்த பதிவு தற்போது, வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here