காதல் மனைவியுடன் KGF பட நாயகன் …! வைரல் புகைப்படங்கள் இதோ !!!

0

கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யாஷ் அவர்கள். இந்நிலையில் இவர் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியின் போது தனது காதல் மனைவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி தற்போது வைரல் ஆகிவருகிறது.

 

ஜம்பாடா ஹுடுஜி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர் நடிகர் யாஷ். அந்த படத்தில் ஒரு துணை நடிகராக நடித்தவர். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து விருதுகளையும் பெற்று உள்ளார். மேலும் அவரின் ஒரு சில படங்கள் அவரை கேலி கிண்டலுக்கு ஆளாக்கியது. இருப்பினும் அவரின் நடிப்பில் KGF திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகுந்த வெற்றியை பெற்றது. மேலும் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில், KGF  படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.  இந்த படம்  நாடு எங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி, கேலி கிண்டல் செய்தவர்களின் முன் தன் நடிப்பால் உயர்ந்து இருக்கின்றார். தற்போது நடிகர் யாஷ் பல கோடியில் செலவில் கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் தனது காதல் மனைவி ராதிகா உடன்  எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரல் ஆகிவருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here