மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய KGF நாயகன் – லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்!!

0

KGF படத்தில் நடித்த நடிகர் யாஷ்க்கு இன்று பிறந்தநாளையொட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் யாஷ்:

யாஷ் என்ற புனைபெயரில் அழைக்கப்படும் நவீன் குமார் கௌடா கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர். முதலில் சீரியலில் நடித்து வந்த அவர் 2007 ஆம் ஆண்டு ஜம்பாடா ஹுடு ஜி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் ஒரு துணை பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் வெளிவந்த பான் இந்திய படமான கே ஜி எஃப் இல் ஹீரோவாக நடித்தார். அந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வெற்றிநடை போட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதியை அறிவித்து உள்ளது படக்குழு.

இந்த நிலையில் நடிகர் யாஷின் பிறந்தநாளான இன்று இவர் தனது குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் யாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், எனது பிறந்தநாள் என்னை ஒருபோதும் உற்சாகப்படுத்திய தில்லை. ஆனால் நான் என் குழந்தைகளுடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளேன் என்றும்,மேலும் நீங்கள் காட்டும் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் இந்த வாய்ப்பின் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here