அனல்பறக்க உருவாகும் கேஜிஎப் 2 – வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!

0

இந்திய திரையுலகில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல ஹிட் படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் கன்னட திரைப்படத்தை மொக்கை என்று கலாய்த்த காலகட்டத்தில் இந்த கே.ஜி.எப் திரைப்படம் வெளிவந்து மாஸ் காட்டியது. தற்போது கே.ஜி.எப் 2 வெளிவரப்போகும் நிலையில் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கே.ஜி.எப் 2

கன்னட மொழி நடிகரான யாஷ் இந்த படத்தில் மாஸ் காட்டியிருப்பார். இந்த படத்தின் கதைகளுக்கேற்ப ஆளும், அடையாளம் கொண்டதாலேயே இந்த படத்தில் யாஷ் தேர்வு செய்யப்பட்டார். இதில் அம்மாவின் பாசத்தையும் சேர்த்து கட்டப்பட்டதால் மக்கள் மத்தியில் பிரபலமானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

யாஷ் அம்மா சிறு வயதில் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவர் சாகும் தருவாயில் நீ சாகும் போது பணக்காரனாக தான் இருக்க வேண்டும் என்ற வார்த்தையை மனதில் வைத்துக்கொண்டு வாழ்கிறார் யாஷ். எதிரியாக வருபவரை தும்சம் செய்வதும், பல அடிதடிகளில் ஈடுபடுவதும் என பல காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

‘ஏண்டி நீ அந்த ஸ்டார் ஹோட்டல்ல, என்ன பண்ணணு சொல்லட்டா’!!

படம் முழுக்க மிரட்டலான காட்சிகளே அதிகம் இடமும் பெற்றிருந்தது. அதனாலேயே இந்த படம் செம ஹிட் என்று சொல்லலாம். இந்தியா முழுவதும் யாஷ் பிரபலமானார். மேலும் பாகுபலி ரேஞ்சுக்கு ஆக்ஷன் ஹீரோவாக மாறினார் யாஷ். அதன் பிறகு கே.ஜி.எப் 2 காக ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்தனர்.

அதற்கிடையில் இந்த கொரோனா வேறு வந்ததால் படப்பிடிப்புகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படுமா?? என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. தற்போது கே.ஜி.எப் படப்பிடிப்புகள் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here