போட்டியின்றி 2 வது முறை தலைவரான சூப்பர் ஸ்டார் – வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகம்!!

0

மலையாள திரையுலகில் நடந்த நடிகர் சங்க பொது தேர்தலில் நடிகர் மோகன் லால் இரண்டாவது முறை, போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்


போட்டியின்றி தலைவர்:

மலையாள திரை உலகத்தில் நடிகர் சங்க தலைவருக்கான பொதுத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதற்காக அம்மாநிலத்தில் உள்ள கொச்சியில் இரண்டு வாரங்களுக்கு முன்பே வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதற்காக, நடிகர் மோகன்லால் மட்டும் நாமினேஷன் தாக்கல் செய்தார்.அவரை எதிர்த்து யாரும் பதில் மனு தாக்கல் செய்யாததால், தொடர்ந்து 2வது முறையாக நடிகர் சங்க தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், இவருடன் சேர்த்து துணை தலைவர்களாக மணியன்பிள்ளை ராஜு மற்றும் நடிகை ஸ்வேதா மேனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களோடு சேர்த்து நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக சுதீர் கரமனா, டினி டோம், மஞ்சு பிள்ளை, லெனா, டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here