வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் கறி.. செஞ்சு தூள் கெளப்புங்க!!

0

நம்மில் பலருக்கு அசைவ உணவு என்றால் கொள்ளை பிரியம். அதிலும் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம்.  அப்படி இருக்க சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் கறி எளிமையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 500 கிராம்

இஞ்சி பூண்டு விழுந்து – 50 கிராம்

அன்னாசி பூ – 2

கறிவேப்பில்லை – சிறிது

தக்காளி – 3

சின்ன வெங்காயம் – 4

தேங்காய் துருவல் – 1/2 கப்

பெருஞ்சிரகம் – 1/2 டி. ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 2 டி. ஸ்பூன்

ஏலக்காய் – 4

உப்பு – தே. அளவு

செய்முறை:

முதலில் தேங்காய் எண்ணெயில் அன்னாசி பூ, ஏலக்காய்யை, கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் மேலும் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். பின்னர் ஏற்கனவே வறுத்த பொருட்களை இந்த வறுத்த தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து பெருஞ்சிரகம், வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளவேண்டும்.

அதை தொடர்ந்து நறுக்கி வைத்த சிக்கனை அதில் சேர்த்து 4 நிமிடங்கள் வரை வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, அரைத்து வைத்த கலவையை அதில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை உப்பு போட்டு வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். தற்போது சூடான சுவையான சிக்கன் கறி ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here