சபரிமலைக்கு பயணம் செய்ய போறீங்களா., அப்போ இத எடுத்து வச்சுக்கோங்க., கேரள அரசு புதிய உத்தரவு!

0
சபரிமலைக்கு பயணம் செய்ய போறீங்களா., அப்போ இத எடுத்து வச்சுக்கோங்க., கேரள அரசு புதிய உத்தரவு!
சபரிமலைக்கு பயணம் செய்ய போறீங்களா., அப்போ இத எடுத்து வச்சுக்கோங்க., கேரள அரசு புதிய உத்தரவு!

கேரளாவில் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உணவு, பாதுகாப்பு மற்றும் பயணம் போன்றவற்றில் பல்வேறு சலுகைகளை கேரள அரசு செய்து வருகிறது. மேலும் இப்போது கார்த்திகை மாதம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் இரு வழிப் பாதைகள் வழியாக செல்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது எருமேலியில் இருந்து 48 கி.மீ. தூர பாரம்பரிய சபரிமலை பாதை பயணம் (பெரிய பாதை) மற்றும் பம்பையில் இருந்து 8 கி.மீ. தூர பயணம் என இரு வழி உள்ளது. இந்த இரு வழி பாதைகளில் வயதானவர்கள் முதல் உடல்நிலை சரியில்லாதவர்களும் ஐயனை தரிசிக்க செல்வார்கள். இதனால் இவர்கள் காட்டுவழி பாதையில் செல்லும் போது ஏதேனும் உடல் நல குறைவு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு கேரள அரசு சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளனர்.

திருப்பதி போறீங்களா? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! அமலான புதிய வழிமுறைகள்!!

அதாவது பைக் பீடர், கரடு முரடு மற்றும் குறுகலான பாதைகளிலும் அதிவிரைவாக செல்லக்கூடிய ரெஸ்க்யூ வேன் மற்றும் ஐ.சி.யு. போன்ற மூன்று வகை ஆம்புலன்ஸில் ஆக்சிஜன், மருந்து உள்ளிட்ட வசதிகளுடன் தயார் செய்துள்ளனர். இம்மூன்று வகை ஆம்புலன்ஸயும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், பக்தர்கள் சபரிமலை வருவதற்கு முன்பு சிகிச்சை பெற்றிருந்தால் அதற்கான குறிப்புகளை கையில் வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here