தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், கேரளாவில் நிபா வைரஸ் என ஒவ்வொரு மாநிலத்திலும் தொற்றுகளின் பரவல் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், மாநில அரசுகள் எல்லையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர், கேரள மாநிலம் பசும்பாரா பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நிபா வைரஸ் தொற்றால் இந்த பயிற்சி மருத்துவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்த மருத்துவரின் ரத்த மாதிரியை பரிசோதிக்க சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவில் தான் உயிரிழந்த மருத்துவருக்கு டெங்கு காய்ச்சலா? இல்லை நிபா வைரஸ்ஸா? என தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் காயத்ரி ரகுமானின் முன்னாள் கணவரா இது? ஆளு இப்படி இருக்கிறாரே? வெளியான ஷாக் புகைப்படம்!!