மாநிலம் முழுவதும் மது விற்பனை அமோகம் – வெறும் 5 நாட்களில் கோடி கணக்கில் கல்லா கட்டிய அரசு!!

0
மாநிலம் முழுவதும் மது விற்பனை அமோகம் - வெறும் 5 நாட்களில் கோடி கணக்கில் கல்லா கட்டிய அரசு!!

பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு வெறும் 5 நாட்களில், 30% மதுக்கள் விற்பனையாகி ரூ.324 கோடிக்கு மேல் பணம் வசூலாகியுள்ளதாக, மாநில மது விற்பனை கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மது விற்பனை:

கேரள மாநிலத்தில் அறுவடை பண்டிகையாக, ஓணம் திருவிழா  கடந்த வாரம் தொடங்கி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தப்பூ கோலம், படகு போட்டி, பாரம்பரிய நடனம் என மொத்த மாநிலமும் விழா கோலம் பூண்டுள்ளது. இந்த பண்டிகை தொடங்கி, சுமார் 30% மது விற்பனையாகி  இதுவரை அரசுக்கு, இந்த 5 நாட்களில் மட்டும் ரூ.324 கோடி வசூல் ஆகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கடந்த ஆண்டு மொத்த, ஓணம் பண்டிகை மது விற்பனை ரூ.561 கோடி என்று இருந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அந்த தொகை கிட்டத்தட்ட வசூலிக்கப்பட்டுள்ளது. பண்டிகை முடிவில் இந்த ஆண்டு ரூ.700 கோடி வரை  இந்த மது விற்பனையில்  வருவாய் கிடைக்கும் என மாநில மது விற்பனை கழக நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா தெரிவித்துள்ளார். அரசின் இந்த மது விற்பனையால், மது பிரியர்கள் ஏகபோக குஷியில் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here