ஓணம் விடுமுறையால் சிக்கி தவிக்கும் கேரளா.. மீண்டும் உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு!!

0

கேரளாவில் ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாட ஏதுவாக மாநிலம் முழுவதும் விடுமுறை விடப்பட்டது. ஆனால் எதிர்பாராவிதமாக அங்கு மீண்டும் கொரோனா தொற்று உச்சத்தை எட்ட வழிவகை செய்துள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 31 ஆயிரத்து 445 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் அலையால் மோசமாக பாதித்த மாநிலங்களில் ஒன்று கேரளா. இந்த நோய் தொற்றுடன் ஜிகா வைரஸும் சேர்ந்து மக்களை படாதபாடுபடுத்தியது. பின்னர் மாநில அரசு எடுத்த முயற்சிகளால் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த தொற்று, சென்ற வாரம் விடப்பட்ட ஓணம் விடுமுறையால் மீண்டும் கொரோனா தொற்று உச்சத்தை எட்டியுள்ளது.

 

அம்மாநிலத்தில் தற்போது வரை மே மாதத்தில் அதிகபட்சமாக 30, 491 பேருக்கு தொற்று பதிவாகி இருந்தது. இதுவே அதிகபட்ச தொற்று பாதிப்பாக இருந்தது. ஆனால் தற்போது நேற்று மட்டும் புதிதாக 31, 445 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு அதிகரித்த இந்த கொரோனா பரவல், கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் விடுமுறையால் கொரோனா மாதிரைகளை சோதனை செய்வதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும் ஏற்பட்ட தடையே இந்த தொற்று அதிகரிப்பதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here