கேரளா மாநிலத்திற்கு போக வேண்டாம் – மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள்!!

0
கேரளா மாநிலத்திற்கு போக வேண்டாம் - மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள்!!
கேரளா மாநிலத்திற்கு போக வேண்டாம் - மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள்!!

கேரள மாநிலத்தில் நிபா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ளதால் அந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டாம் என்று கர்நாடக மக்களை அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய வேண்டுகோள் :

உலகம் முழுவதும் கோவிட் -19 வைரஸின் தாக்கம் விஸ்வரூபமாக பரவி உள்ளது. இதை தடுக்க தடுப்பூசி செலுத்துதல் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஓணம் பண்டிகையின் போது அளிக்கப்பட்ட தளர்வுகளால் பொது மக்கள் ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இன்றி ஒன்றாக கூடி பண்டிகையை கொண்டாடினர். இதனால், தற்போது அங்கு கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து விட்டது.

கேரளா மாநிலத்திற்கு போக வேண்டாம் - மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள்!!
கேரளா மாநிலத்திற்கு போக வேண்டாம் – மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள்!!

இந்த நிலையில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் வாய்ப்பு மாநிலத்தில் எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாக புதிதாக நிபா வைரஸ் பரவி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த வைரசால், ஒரு சிறுவன் இறந்தான். இதுவே மாநிலத்தின் முதல் நிபா வைரஸ் பலியாக பார்க்கப்பட்டது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்திற்கு போக வேண்டாம் - மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள்!!
கேரளா மாநிலத்திற்கு போக வேண்டாம் – மக்களுக்கு மாநில அரசு வேண்டுகோள்!!

இதனை அடுத்து, கேரளாவில் பரவியுள்ள நிபா மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதன் பக்கத்து மாநிலமான கர்நாடகா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் கேரளத்தவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இங்கு வர வேண்டும். இது போக முக்கிய தவிர்க்க முடியாத வேலை இருப்பவர்கள் வரலாம். மற்றவர்கள் இங்கு வருவதை அக்டோபர் மாதம் வரை தவிர்க்க வேண்டும் என கர்நாடக மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here