மூன்றாவது முறை தொலைப்பேசி மணி ஒலிப்பதற்குள் போனை எடுத்து பேசிவிட வேண்டும் – கேரளா அரசு அதிரடி உத்தரவு!!

1

இனி தொலைபேசி மணி ஒலிக்கத் தொடங்கியதும் மூன்றாவது முறை ஒலிப்பதற்குள் போனை எடுத்து பேசிவிடவேண்டும் என அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு கேரளா மாநில அரசு, தொலைப்பேசி மணி ஒலிக்க தொடங்கியதும் மூன்றாம் முறை ஒலிப்பதற்குள் போனை எடுத்து பேசிவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை வேகமாக பூர்த்தி செய்தல், விரைவான சேவை வழங்குதல் உள்ளிட்டவைகளுக்காக அம்மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை கேரளா அரசின் பஞ்சாயத்து இயக்குநர் M.P. அஜித் குமார் அம்மாநிலத்தில் உள்ள 941 பஞ்சாயத்துகளுக்கும் பிறப்பித்துள்ளார். மேலும் ஊராட்சி மன்ற அதிகாரிகள் போனை எடுத்து பேசும்போது, அவர்கள் தங்களின் பெயர் மற்றும் பதவியை எதிர்முனையில் பேசுவபரிடம் தெளிவாக கூறவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து ஊராட்சி மன்ற தலைமை அதிகாரிகளிடம் இதை தவறாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here