ரேஷன் கடை திறக்கும் நேரத்தில் அதிரடி மாற்றம் – அரசின் ஷாக் நியூஸ்! கார்டுதாரர்கள் அதிர்ச்சி!!

0
ரேஷன் கடை திறக்கும் நேரத்தில் அதிரடி மாற்றம் - அரசின் ஷாக் நியூஸ்! கார்டுதாரர்கள் அதிர்ச்சி!!
ரேஷன் கடை திறக்கும் நேரத்தில் அதிரடி மாற்றம் - அரசின் ஷாக் நியூஸ்! கார்டுதாரர்கள் அதிர்ச்சி!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை துவக்கி வைத்தது. இதை கருத்தில் கொண்டு கேரள அரசு பழங்குடியின மற்றும் அகதிகளும் பயன்பெறும் வகையில் அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இம்மாத இறுதிக்குள் திட்டத்தை முடிக்கும் தருவாயில் இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் ரேஷன் கார்டு பெற்று பயனடைந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் டிசம்பர் 26 ந் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. இதனால் பயோமெட்ரிக் மூலம் பொருட்கள் வழங்கப்படுவதால் சர்வர் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரள அரசு கூட்ட நெரிசலையும், நெட்வொர்க் பிரச்சனைகளையும் தீர்க்க சில மாவட்டங்களில் காலை, மாலை என இரண்டு ஷிப்ட் முறையில் டிசம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மாவட்டத்தின் இந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – வெளியான புதிய உத்தரவு!!

அதாவது, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு, கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற மாவட்டங்களில் டிசம்பர் 5 முதல் 10 ந் தேதி மற்றும் 19 முதல் 24 ந் தேதி வரை, காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், டிசம்பர் 12 முதல் 17 ந் தேதி, மற்றும் 26 முதல் 31ந் தேதி வரை மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் வழங்கப்படுகிறது. அதே போன்று எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், கண்ணூர், கோட்டயம், காசர்கோடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் டிசம்பர் 12 முதல் 17 ந் தேதி, மற்றும் 26 முதல் 31 ந் தேதி வரை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், டிசம்பர் 5 முதல் 10 ந் தேதி மற்றும் 19 முதல் 24 ந் தேதி வரை மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here