மாநிலம் முழுவதும் கிடுகிடுவென உயரும் பேருந்து, ஆட்டோ கட்டணம் – மே 1 முதல் அமல்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
மாநிலம் முழுவதும் கிடுகிடுவென உயரும் பேருந்து, ஆட்டோ கட்டணம் - மே 1 முதல் அமல்! பொதுமக்கள் அதிர்ச்சி!!
மாநிலம் முழுவதும் கிடுகிடுவென உயரும் பேருந்து, ஆட்டோ கட்டணம் - மே 1 முதல் அமல்! பொதுமக்கள் அதிர்ச்சி!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால், பேருந்து, டாக்சி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த கேரள அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், இது வருகிற மே 1ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு முடிவு:

நாடு முழுவதும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 முதல் 15 வரை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்து, அதனையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. இதுமட்டுமில்லாமல், அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணங்களை உயர்த்த கேரள தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவர்களின், இந்த கோரிக்கையை ஏற்று கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி அரசு பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 லிருந்து 12 ரூபாயாகவும், விரைவு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 14 லிருந்து 15 ஆகவும், அதி விரைவு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாய் 22 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழுவுக்கு மத்திய அரசு கொடுத்த அங்கீகாரம் – விமான சேவை துறையில் இணைந்து சாதனை!!

இதுபோக கனரக வாகனங்களில் குறைந்தபட்ச கட்டணம் 200 லிருந்து 225 ரூபாயாகவும், கூடுதல் கிலோமீட்டர்களுக்கு 17 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது., ரசிகர்களுக்கு Bye சொன்ன விஷ்ணு விஷால் – ஷாக் தகவல்!!

கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள, இந்த பேருந்து கட்டணங்கள் வருகிற மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள சாமானிய மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பின் தற்போது, மெல்ல இயல்பு நிலை திரும்பி வரும் இந்த நேரத்தில் பேருந்து கட்டணத்தின் இந்த அதிரடி உயர்வு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது குறித்து, அரசு பரிசீலிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here