மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல் – 12 வயது சிறுமி பலி! சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!

0
மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல் - 12 வயது சிறுமி பலி! சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!
மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல் - 12 வயது சிறுமி பலி! சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!

கேரள மாநிலத்தில் புதிதாக பரவி வரும் பறவை காய்ச்சலுக்கு, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி பலியான சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை அதிர்ச்சி :

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும், பரவியுள்ள கொரோனா வைரசால் நாடு மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. தற்போது, கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் குறைந்து, கொஞ்சம் இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் திடீரென பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள்  கிருமி நாசினி தெளித்தல், நடவடிக்கையை கண்காணித்தல் உள்ளிட்ட துரித நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இந்த வகை காய்ச்சல் பாதிப்பு, தமிழகத்திலும் ஏற்படலாம் என அஞ்சப்படுவதால், மாநிலத்தின் எல்லை பகுதியில் சோதனை பலப்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில், இந்த காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருப்பது மாநில சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here