என்ன கீர்த்தி இப்படி ஓடுறிங்க – பரிதவித்து போன ரசிகர்கள்!!

0

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். அந்த விடீயோவிற்கு தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களும் தங்களது நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான நடிகை கீர்த்தி சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்தவர் ஆவார். இவர் என்னதான் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்திருந்தாலும் இவருக்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை.

‘என்ன புகழ் யாஷிகாவா இப்படிலாம் பண்றீங்க’ – நொந்து போன “முரட்டு சிங்கிள்ஸ்”

இவர் தனது கடின உழைப்பின் மூலமாக தான் இன்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழில் முதன் முதலாக “ரஜினி முருகன்” திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தனது குறும்பான நடிப்பின் மூலமாக அனைவருக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக மாறி விட்டார்.

இதனை அடுத்து தொடர்ந்து அவர் கன்னடம், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்தார். இப்படியாக இருக்க, இவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுவது “மகாநதி” திரைப்படம் தான். காரணம், இந்த படத்தில் நடிக்க கீர்த்தி ஒப்பந்தமான போது பலரும் கிண்டல் செய்தனர். ஒரு மெகாஸ்டாரின் வாழ்க்கை கதையில் தற்போது அறிமுகமான ஒரு நடிகை நடிப்பதாக என்பது போன்ற கேள்விகள் கூட எழுந்தது.

ஆனால், கீர்த்தி தனது கடுமையான உழைப்பின் காரணமாக அந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவர் மத்தியில் பெயர் எடுத்தார். இப்படியாக இருக்க, இந்த பொது முடக்கத்தின் போது கீர்த்தி தனது உடல் எடையினை வெகுவாக குறைத்து விட்டார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீண்டும் பழையபடி மாறும்படி அறிவுறுத்தினர். இதனை அடுத்து கீர்த்தி தனது ரசிகர்களின் கோரிக்கையினை ஏற்று தனது உடல் எடையினை கூட்டி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தனது போட்டிற்காக ஓடுகிறார். இந்த வேகம் வீக்எண்டுக்காக என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

                                  முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here