‘என் அழகுக்கும் ஸ்டைலுக்கும் காரணமே இவங்க தான்’ – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் என்று அனைத்து மொழி திரையுலகிலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதன் முதலாக தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினி முருகன்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

முடி உதிர்தல் பிரச்சனையா?? கவலையே வேண்டாம், இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

இந்த திரைப்படத்தில் மிகவும் குடும்பபாங்காக நடித்ததால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதனை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என்று அனைத்து மொழி படங்களில் நடிப்பதில் இவர் கவனம் செலுத்தி நடித்தார்.

இப்படியாக இருக்க, இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இப்படியாக இருக்க கீர்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுவது, “மகாநதி” திரைப்படம் தான். இந்த திரைப்படம் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதை ஆகும்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார் என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்திற்காக கீர்த்தி பல விருதுகளையும் வென்றிருப்பார். இதனை தொடர்ந்து கீர்த்தி தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த பொது முடக்கத்தின் போது கீர்த்தி தனது உடல் எடையினை வெகுவாக குறைந்து விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவரை பழையபடி மாற வலியுறுத்தினர். அதே போல் தனது உடல் எடையினை கவனித்து வருகிறார், கீர்த்தி. இப்படியாக இருக்க, தற்போது தனது குடும்பத்தினருடன் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here